Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர்ந்துபோன சாலை …. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

பழைய சாலையை பெயர்க்காமல் தார் ஊற்றியதால் லாரியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து பெரியார் அணை சாலை வரை தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே புதிய சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்பு அங்கிருந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |