முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கோட்டப்பட்டி போன்ற பகுதிகளுக்கு உட்பட்ட அரூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்த 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சமூக இடைவெளி இன்றியும் மற்றும் முககவசம் அணியாமலும் சென்ற 133 நபர்களுக்கு 48,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதன்பின் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட 63 நபர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.