மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய வந்தது. அதன்பின் அங்கிருந்த 73 வாலிபர்கள், 23 பெண்கள் மற்றும் 5 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டனர்.
அதோடு 100 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறை அடங்கிய பெட்டியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் பாஜக துணை தலைவர் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மராக்கை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. அதோடு ஆதாரங்களை அழிக்கவும், நாட்டை விட்டு வெளியேறவும் முயற்சி செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.