Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நம் பல்லை பாதுகாக்கும் டூத்பிரஷ்ஷை… “எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்”… எப்படி பராமரிப்பது..?

நம் அன்றாட வாழ்க்கையில் பல் துலக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று.  நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்தே நம் தினத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு பல் துலக்கும்போது பிரஷ் கொண்டு பல காலம் பல் துலக்குவது என்பது ஆரோக்கியமானதா என்பதை இதில் பார்ப்போம்.

அமெரிக்க பல் சங்கத்தின் கூற்று படி ஒவ்வொரு நாளும்  பல் துலக்கும்போது பிரஷை கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்க வேண்டும்.  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டியது அவசியம். ஒருவேளை மின்சாரத்தில் இயங்கும் பல் துலக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தினால் அதில் உள்ள பிரஷ்களை மற்றும் மாற்றவேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 36 பேரை இரண்டு குழுக்களாக பிரித்து,  அவர்களுக்கு சில பல் துலக்கல் முறைகள் வழங்கப்பட்டன.

ஒரு குழு மூன்று மாத ஆய்வு முழுவதும் ஒரே பல் துலக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தியது. மற்ற குழுவானது ஒவ்வொரு மாதமும் தங்களது பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்றி பல் துலக்கினர். பங்கேற்பாளர்கள் கட்டமைப்பு போட்டோ எடுத்துக்கொண்டு வைத்தது. அவர்கள் பல் துலக்கலின் போது பிரஷ்ஷின் தேய்மானம் காரணமாக அது பற்களில் ப்ளேக் என்னும் கட்டமைப்பை சரியாக அகற்றவில்லை. பல் துலக்கிய பிறகு குழாய் நீரில்  பிரஷ்ஷை நன்றாகக் கழுவி நிமிர்ந்து நிலையில் உலரவைக்கவேண்டும்.

மற்ற பல் துலக்கும் பிரஷ்கள் உங்கள் பிரஷ்ஷில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூடிய டப்பாவில் வைப்பதை தவிர்க்கவும். அவற்றை காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். மூடிய டப்பாவில்  வைத்தால் பாக்டீரியா உற்பத்தி அதிகரிக்கும். பிரஷ்ஷை கழுவுவதற்கு கிருமி நாசினிகள், பாத்திர கழுவிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.  ஏனெனில் அவை உங்கள் பல் துலக்கும் பிரஷ்ஷை சேதப்படுத்தும். மேலும் குழந்தைகள் பல் துலக்கும் போது அந்த பிரஷ்களை அடிக்கடி மெல்ல கடிக்கிறார்கள். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இதை பின்பற்றுவது மூலம் ஆரோக்கியமான பற்களே நாம் பெற முடியும்.

Categories

Tech |