புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க …
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை –1 கப்
லேசாக வறுத்த எள்ளு – 4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
வறுத்த காய்ந்த மிளகாய் –6
புளி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
வறுத்த எள்ளு, வேர்க்கடலை, தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டினால் சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி தயார் ..!!