தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் துல்கர்னைன் சேட் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜீத் பொருளாளர் பரிக்கி, மாவட்ட செயலாளர் கமரூன் ஜமான், துணை தலைவர் பீர்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.