சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி துறை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ஆன முத்துராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர்.