Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

9 அம்ச கோரிக்கைகள்…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வருவாய்த்துறை அலுவலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளரான கண்ணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து கொரோனா பணியில் உயிரிழந்த 40 பேருக்கு அரசு அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் பணம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |