ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தையல் கலைஞர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தையல் கலைஞர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பிச்சைக்கனி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு 5 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.