பா.ம.க. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பா.ம.க. கட்சியினர் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரான டேனியல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அதாவது ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து பா.ம.க. கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. கட்சியினர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர்.