10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் பங்கேற்றதால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு நிலுவையில் இருந்தன. இந்த போராட்டத்தில் நேரடி நியமன வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்காமல் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.