மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, நாட்டின் பிரதமரான ஆங் சாங் சூகி உட்பட பல முக்கிய தலைவர்களை சிறை வைத்திருக்கிறது. எனவே ராணுவ ஆட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து கடந்த பல மாதங்களாகவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை சுமார் 800 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி ஆசிரியர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனால் ராணுவம், சுமார் 1,25,000 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல்கலைகழக பணியாளர்கள் சுமார் 19,500 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.