Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்… 50 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தன் தலையை ஹிஜாபால் சரியாக மறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 17 ஆம் தேதி அன்று பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டம் நடத்த தொடங்கினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாபை கழற்றி வீசினர்.

மேலும், அதனை நெருப்பு வைத்து கொளுத்தினார்கள். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் போராட்டத்தை பரப்பவிடாமல் தடுப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள பக்கங்களை முடக்கியது. போராட்டம் நடத்தும் பெண்கள் மீது காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |