Categories
உலக செய்திகள்

கொரோனா பயம் இல்லை, ஊரடங்கை நீக்குங்க…. ஜெர்மனியில் போராட்டம்….!!

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார்.

அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் எனவும் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்றுகூட அடுத்த இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறினார்.

இந்நிலையில் பெர்லினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரண்டு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தடையினை ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |