Categories
உலக செய்திகள்

ஊரடங்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை.. காவல்துறையினர் மீது தாக்குதல்..!!

லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரபூர்வமான புள்ளி விவர தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் படி கடந்த ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறி காவல்துறையினரும் பொதுமக்களும் ஒருவரை ஒருவர் தாக்கி சாலையில் சண்டை போட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது டென்னிஸ் பந்துகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவல்துறையினர் மூவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டக்காரர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |