தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் , மருத்துவமனையின் வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கையில் பேனர்களை ஏந்தி பேரணியாக சென்றனர். மேலும் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.