கனடாவில் வசிக்கக்கூடிய இலங்கையை சேர்ந்த மக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது.
எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
Protest in Toronto, Canada 🇨🇦 #LKA #SriLankaCrisis #SriLanka https://t.co/VSrOxXJ3nM
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) April 4, 2022
போராட்டங்கள் அதிகரித்ததால் அனைத்து அமைச்சர்களும் மொத்தமாக பதவி விலகிவிட்டார்கள். இந்நிலையில் கனடாவில் உள்ள ரொரன்ரோவில் வசிக்கக்கூடிய இலங்கையைச் சேர்ந்த மக்கள், அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையின் தேசிய கீதத்தை அவர்கள் பாடிய வீடியோ வெளியாகி இருக்கிறது.