ரஷ்ய நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் தடுப்பூசி தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. எனவே ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.
அந்நாடுகளில், மக்கள் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கனடா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ரஷ்யாவிலும், சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற பெயரில் மக்கள் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்நாட்டிலுள்ள பெர்பிக்னன் என்னும் பகுதியில் மக்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் குவிந்திருக்கிறார்கள். தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரான தங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.