டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெங்கக்கல்பாளையம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மது கடையை மூடக்கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்த கடை இரவு 8 மணிக்கு அடக்கப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் வழக்கம்போல் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மற்றொரு தரப்பினர் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனென்றால் இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று மது அருந்துவது கடினமாக இருப்பதால் ஊருக்குள் மதுக்கடை கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.