Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்பா என்ற தலைப்பில்… துயரத்தை விளக்கும் ஓவியம்… நூதன முறையில் போராட்டம்…!!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஓவியங்கள் வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வங்காளதேசம், பாகிஸ்தான், கென்யா, இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 117 நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 20 வது நாளாக இவர்களின் போராட்டம் தொடர்கிறது.

இதனைத்தொடர்ந்து அப்பா என்ற தலைப்பில் வாசகங்கள் எழுதியும், ஓவியங்களை வரைந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் படும் துயரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையர் கமிஷனர் ஜெசிந்தாமாலாசரஸ் உங்களது கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |