மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தொலைபேசி நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கேஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் உடனடியாக இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, இளம்பரிதி, திரிஷா மேரி, அர்ஜுனன், ராமச்சந்திரன், ஜெயா பூபதி, சிசுபாலன் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.