Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் ஐயா..! 2புயல் வந்துருக்கு…. ப்ளீஸ் உடனே கொடுங்க…. கடலூர் விவசாயிகள் போராட்டம் ..!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டமானது மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலும், சம்பத்குமார், காந்தி, மெய்யழகன், குமரகுருபரன், மணி, பஞ்சாட்சரம் போன்ற ஒன்றிய தலைவர்கள் முன்னிலை வகித்தும் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன் போன்றோர் கண்டன உரையாற்றினார்கள். இதனைதொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன், சரவணன் மற்றும் செயலாளர் முருகன், தென்னரசு போன்ற பலர் இதில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அதன் பின்னர் இவர்கள் அனைவரும் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.

Categories

Tech |