இலங்கையில் போராட்டத்தில் கலவரம் நடக்காமல் இருக்க கன்னியாஸ்திரிகள் இரவு முழுக்க உறங்காமல் போராட்டக்காரர்களை காத்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீப நாட்களாக கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதனால் கலவரம் வெடித்தது. அங்கு பதற்ற நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மத மோதலாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து கொண்டிருப்பதாக புகார் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து, இஸ்லாமிய புத்தர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு இடையே கலவரத்தை உண்டாக்கி மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் அரசாங்கம் செயல்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது.
அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக இவ்வாறு முயற்சி மேற்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் கோ கோட்ட காம என்னும் பகுதியில் நேற்று அதிகமான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதம் தொடர்பான பிரச்சனை நடந்து விடக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஒன்று திரண்டு போராட்டம் மேற்கொள்ளும் மக்களை காத்திருக்கிறார்கள்.
இரவு முழுவதும் வன்முறை நடக்காமல் இருப்பதற்காக கன்னியாஸ்திரிகள் தூங்காமல் இருந்துள்ளனர். கன்னியாஸ்திரிகளின் இந்த செயல் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது.