மாற்றுத்திறனாளிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம்-மதுரை சாலையில் இருக்கும் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் 2016 இன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மாற்றுத்திறனாளிகள் கைது செய்தனர். அதன்பின் அவர்கள் தனியார் பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.