Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நாங்க ஏற்கனவே சொல்லிருக்கோம்” எங்களுக்கும் அதுல வேலை வேணும்… தி.மலையில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கை மனுவினை வழங்க சென்றுள்ளார். இந்த கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கப்படும் என முன்னரே கடந்த 16 ஆம் தேதியே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனு கொடுக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற போது கலெக்டர் சந்தீப் நந்தூரி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மூர்த்தி மற்றும் வெங்கடேசன் போன்றோரை அடையப்பலம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, இந்த மனுவை பரிசீலனை செய்து 100 நாள் வேலை தொடர்பான பணி உத்தரவை வரும் 14-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்படி வழங்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், மனுவை பெற்றுக் கொண்டேன் என நகல் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |