தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் இருந்து கரூர் வரை விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்திருந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவித்திருப்பதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு-பெருந்துறை ரோட்டில் ஐ.எம். ஏ சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் டாக்டர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பேரணியானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகன பேரணி ஓசூரில் துவங்கி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து கரூர் மாவட்டத்திற்கு ஈரோட்டிலிருந்து வாகன பேரணியானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய துணை தலைவர் சி.என். சின்ராசு கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இந்த பேரணி ஈரோடு அரசு மருத்துவமனை, ரவுண்டானா வழியாக அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம், கொல்லம்பாளையம், கொடுமுடி, சிவகிரி வழியாக கரூர் மாவட்டத்தில் நிறைவடையும்.