Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன வித்தியாசமா இருக்கு… இலைகளை கட்டிக்கொண்டு போராட்டம்… திருச்சியில் பரபரப்பு…!!

உரம் விலை உயர்வை கண்டித்து தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இலைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் இடுப்பில் இலைகளை கட்டிக்கொண்டும், ஏர் கலப்பையுடன் அரை நிர்வாண கோலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் 2 பெண்கள் உட்பட 45 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த உறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து விட்டனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |