அரசு ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கல பாண்டியன் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.