வருவாய்த்துறை ஊழியர்கள் வட்டாட்சியர் பயிற்சி ஆணையைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரம், அம்பத்தூர், மதுரவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் புதிதாக வந்த ஆர்.கே பேட்டை சேர்த்து தற்போது 9 வருவாய் வட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நகர பட்டியலில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான 4 பதவிக்கும், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் போன்ற பணிகளுக்கு தலா ஒரு பதவிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே பணிகளில் உள்ளவர்களின் பணியிட மாற்றம் மற்றும் பணி உயர்வு போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னை மாவட்டத்தில் இருந்து பயிற்சி வட்டாட்சியர் மற்றும் குறுவட்ட ஆய்வாளர் பணி நியமன ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. ஆனால் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் மாவட்ட வருவாய் அலுவலருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில்தான் பூண்டி நீர்த்தேக்கத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மணல் மூட்டைகளை சேகரித்து வைப்பதற்காக கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.