Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

50 கோடி ரூபாய் பாதிப்பு…. இதை கண்டிப்பா பண்ண கூடாது…. அதிகாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரீமிய தொகை 50 கோடி ரூபாய் செலுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மத்திய அரசின் அறிவிப்பின்படி பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பிரீமியம் செலுத்துதல் மற்றும் காசோலை பரிமாற்றம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி ஒத்தக்கடை அருகில் இருக்கும் பொது இன்சூரன்ஸ் நிறுவனம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நல சங்கங்கள் கூட்டு போராட்டம் குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், இராஜ மகேந்திரன், முத்துக்குமரன் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 20 பொது இன்சூரன்ஸ் கிளை நிறுவனங்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தால் பிரீமியத் தொகை 50 கோடி ரூபாய் வரை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர் சங்க நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |