தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்ட தலைமை அலுவலக வளாகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட தலைவர் ராஜேந்திரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் துளசிதரன், சுரேஷ், வளர்ச்சி அதிகாரிகள் தியாகராஜன், முதல் நிலை ஊழியர் நரசிம்மன் போன்ற பலர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு மாற்றிவிட முயற்சி செய்கிறது எனவும், விமானம், ரயில்வே, வங்கி என அனைத்தையும் தனியார் மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து எல்.ஐ.சி-யின் பங்குகளை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.