Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க… மனு கொடுக்கும் போராட்டம்…. விவசாய சங்கத்தினரின் கோரிக்கை…!!

விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கரும்புக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாயும், உளுந்து மணிலா பயிர்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும் நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டமானது மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கடவுள், பழனி, ஆறுமுகம், பஞ்சாட்சரம் போன்ற பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை தாசில்தார் பலராமனிடம் அளித்தனர். அப்போதுபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதற்கு தாசில்தார் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |