Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத ஏன் செய்யல…? கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… கோவையில் பரபரப்பு…!!

அதிகாரிகள் பாலம் கட்டாமல் தூர்வாரும் பணியை மட்டும் மேற்கொண்டதால் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. இதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த கால்வாயில் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் பாலத்தை கட்டாமல் தூர்வாரும் பணியை மட்டும் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் கோட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை முன்வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |