Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னது 10 வருஷமா இல்லையா…? கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் இருக்கும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories

Tech |