பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். அதோடு இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் பகுதிக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தால் கல்லூரிக்கு வரும் அனைவரும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு தாமதமாக வருபவர்களுக்கு அரைநாள் ஆப்சென்ட் போடுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தின் முகப்பு வாசலில் நின்றுகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அந்த கல்லூரியின் முதல்வர் மீனா என்பவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் பேராசியர்கள் போராட்டமானது தொடரப்பட்டுள்ளது. இதனால் இந்த கல்லூரியில் எந்த வகுப்புகளும் நடைபெறவில்லை.