தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறும், இ.எஸ்.ஐ திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு விற்பனைக்கு ஏற்றவாறு கடைகளில் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கர், ரத்தினராஜ், சோபன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் மற்றும் வெளி மாவட்ட நிர்வாகிகள் உதயசங்கர், ராமகிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீதர், முருகன், சாதிக்பாட்சா போன்ற பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.