Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சம்பளம் வழங்குவதில் தாமதம்…. போராட்டத்தில் ஈட்டுபட்ட தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சம்பள பணத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கூடலூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6 மாதமாக இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் சம்பளத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது 6 மாதமாக நிரந்தர தொழிலாளர்களுக்கும், 2 மாதமாக தற்காலிக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக அவர்கள் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காப்பி உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்தவுடன் சம்பளம் வழங்கப்படும் என தோட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |