போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த 3 பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விராலிப்பட்டி பகுதியில் வசிக்கும் கௌசல்யா தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கௌசல்யா கூறும்போது, நான் பொன்னகரத்தில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் போது ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் என்னை காதலிப்பதாக கூறினார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள நண்பர்கள் முன்னிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளோம். அதன்பின் நான் கர்ப்பமானதால் என்னை அவர் ஊருக்கு அனுப்பிவிட்டார். மேலும் அவருடைய பெற்றோர் என்னை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் என்னை மிரட்டி கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளார். எனவே எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு அந்த பெண் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.