சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்திலிருக்கும் ஏரிக்கரை பகுதியில் சேதமடைந்த சாலை ஒன்று உள்ளது. அதனை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரில் சாலைகளை சீரமைப்பதற்காக ஜல்லிக் கற்களை சாலையில் பரப்பியுள்ளனர். ஆனால் அதன்பின் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படாமல் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜல்லிக் கற்களால் சேதமடைந்து பஞ்சராகி விடுகின்றது. மேலும் ஜல்லிக் கற்கள் கால்களில் குத்தி காயம் ஏற்படுவதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதியவர்களும் ஊரை சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலைப் பணியை விரைவில் தொடங்கி சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.