உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் 121- ஆம் படைப்பிரிவினுடைய ராணுவ வீரர்களின் மனைவிகளான நாங்கள் கடந்த நான்கு மாதங்களாக எங்களது கணவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியாமல் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.