அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பண்டிகை கால சலுகை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அதன் பிறகு மருத்துவ காப்பீடு சலுகை வழங்க வேண்டும் எனவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் 50 – ககும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.