செல்போன் கோபுரத்தில் ஏறி அ.ம.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் ஆட்டோ டிரைவரான சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.ம.மு.க. தொண்டர் ஆவார். இந்நிலையில் முன்னாள் முதல் – அமைச்சரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
இதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிங்கராஜ் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிங்கராஜிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு சிங்கராஜ் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.