சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வை உயர்த்த வேண்டும் எனவும், ஒப்பந்தம் சரியாக எழுதிட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு. தலைவரான ராமு என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தொழிலாளர்கள் தாசில்தாரிடம் கொடுத்துள்ளனர்.