மாவட்ட ஆட்சியரின் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் இருக்கும் அணையை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ள காவல்துறையினர் கணேசனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கணேசனின் குறையைக் கேட்டு தெரிந்து கொண்டார். அதாவது கணேசனுக்கு மீண்டும் பொதுப்பணித் துறை காவலாளி பணி வேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்துள்ளார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கணேசனிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.