இந்தியா உலகிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
புத்த பூர்ணிமா விழாவையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அதிக அளவில் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த கொரோனா பிரச்சினையை காவல்துறையினர்,
மருத்துவத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அதிலும் கொரோனாவுடன் நேருக்கு நேர் போராடும் மருத்துவர்கள் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிவித்த அவர், உலகிற்காக இந்தியா உழைத்து வருகிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.