தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்…. ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு, துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க.
உங்களுக்கு மட்டும் ஒரு நிகழ்ச்சியில் பவர் கட் ஆனா, உடனே சஸ்பெண்ட் பண்ணுவீங்க. இன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமே இல்லாமல் கஷ்டப்படுறாங்களே, எத்தனை அதிகாரிகளை நீங்கள் சஸ்பெண்ட் செஞ்சு இருப்பீங்க என்பதை இந்த தமிழக அரசு மக்களுக்கு சொல்லணும். திமுகா என்றாலே தில்லு முல்லு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது என தெரிவித்தார்.