நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டி.ஆர்.பாலு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். நடுத்தர குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனைக்காக உடனடியாக உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் ஹெச்ஐவி உடைகளை அணிந்து மருத்துவர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.