தேனியில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு விவசாயி இலவசமாக பாலை வழங்கியுள்ளார்.
தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் விவசாயியான சீனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் மாடுகளை வளர்த்து பால் விற்பனையிலும் ஈடுபடுகிறார். இந்நிலையில் தற்போது அரசாங்கம் விதித்த ஊரடங்கில் டீக்கடை செயல்படவில்லை. இதனால் பாலின் விற்பனை அளவு குறைந்துள்ளது. இதனால் இவர் தேனி அரசு மருத்துவமனையிலிருக்கும் கொரோனாவிற்கான சிகிச்சை மையத்திற்கும், வடவீரநாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சை மையத்திற்கும் இலவசமாக தலா 40 லிட்டர்கள் வீதம் பாலை வழங்கினார்.