சுவிட்சர்லாந்தில் ஹோட்டல்களை விரைவில் திறக்க வேண்டும் என்று மாகாணங்கள் தெரிவித்து வருவது மத்திய குழுவிற்கு அதிருப்தி அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக மத்திய குழு தெரிவித்திருந்தது. அதன்படி வெளிப்புற நிகழ்வுகளில் 17 பேர் வரை பங்கேற்கலாம் என்றும், கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உணவகங்கள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என்றும், வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் தொடரும் என குறிப்பிட்டிருந்தது. அதன் பின் இரண்டாம் கட்ட தளர்வு வரும் ஏப்ரல்1 தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய குழு திட்டமிட்டதைவிட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஹோட்டல்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று கிராபுண்டன் மாகாணங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் மாகாணங்கள் முன்னதாகவே கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளது.