Categories
உலக செய்திகள்

இந்த பிராந்தியத்துக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து… பிரதமர் அதிரடி உத்தரவு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரதமர் இம்ரான்கான் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு தற்காலிகமான மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை தயார் செய்யும்படி சட்ட மந்திரி பாரிஸ்டர் பரோக் நசீமுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா கூறிவரும் சிறிய பிராந்தியமான கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த மாத தொடக்கத்தில் பிரதமர் இம்ரான்கான் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு தற்காலிகமான மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை தயார் செய்யும்படி சட்ட மந்திரி பாரிஸ்டர் பரோக் நசீமுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே அந்நாட்டு ஊடகங்கள் பாகிஸ்தான் நீதித்துறை அதிகாரிகள் அந்த சட்டத்தை இறுதி செய்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் கில்கிட்-பால்டிஸ்தான் சுப்ரீம் மேல்முறையீடு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்படலாம் மற்றும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துடன் பிராந்தியத்தின் தேர்தல் ஆணையம் இணைக்கப்படலாம் என பாகிஸ்தான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சர்வதேச சட்டங்கள், பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு, ஐ.நா. சபையின் தீர்மானங்கள் குறிப்பாக காஷ்மீர் மீதான பொது வாக்கெடுப்பு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒப்பீட்டு அரசியலமைப்பு சட்டங்களை நன்றாக படித்த பிறகே இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Categories

Tech |